நாம் gay-க்கள் அனைவருக்கும் நிச்சயம் ஒரு காலக்கட்டம், நம் மனதுக்கு நெருக்கமான உறவின் ஆரம்பகாலத்தை நினைவுக்கூரத்தக்கதாக மாற்றியிருக்கும். காலங்களும், உறவின் நிலையும் மாறியிருக்கலாம் ஆனால் அந்த காலத்தின் இனிமை மட்டும் எப்போதும் மாறாது. சில சமயம் இன்ப வேதனையாக கூட இருக்கும். எனக்கு கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பரிட்சை சமயத்தில், group study-க்காக என் நண்பர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு போனபோது, அங்கே என் காதல் நண்பனுடன் நெருங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சில வாரங்களில் எங்கள் உறவு மலர்ந்து, உடலுறவுகளில் விரிந்து, பரிட்சை முடியும் போது வந்த முதல் ஊடல் மற்றும் பிரிவும் என் கண்முன் விரிந்தது. அப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தை நான் இந்த படத்தில் பார்த்தபோது எனக்கு என் கடந்த காலத்துக்கு பயணப்பட்ட பரவசம். படம் முடியும் போது எனக்குள்ளும் இன்ப வேதனை.
1983 கோடை காலம்… தொல்பொருள் பேராசிரியர் சாமுவேலின் மகனான 17 வயது எலியோ பெர்ல்மேன் வீட்டுக்கு 24 வயதான ஆலிவர், பேராசிரியர் சாமுவேலிடம் internship செய்ய வருகிறார். ஆலிவரின் எலியோவின் தந்தை ஆலிவரை தங்கள் வீட்டிலேயே தங்க சொல்கிறார். சாமுவேலின் குடும்பத்தினரிடம் இயல்பாக பழகும் ஆலிவருக்கும், adolescent பருவத்தில் இருக்கும் எலியோவுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் அடுத்தவரது அருகாமையே இன்பம் கொடுக்க, இருவரும் ஒன்றாக நிறைய நேரம் செலவழிக்கிறார்கள். விருந்து, கைப்பந்து விளையாட்டு என்று கூட்டத்தில் ஏற்படும் அறிமுகம், அவர்கள் பக்கத்து நகரத்துக்கு print out எடுக்க தனியாக போய், ஒன்றாக ஊர்சுற்றும் போது நெருக்கம் அதிகமாகிறது. நாட்கள் செல்ல செல்ல, அந்த நெருக்கம் உடலளவிலும் ஏற்படுகிறது.
இந்த படத்தில் explicit ஆன உடலுறவு காட்சிகள் என்று எதுவும் இல்லை என்றாலும், அவர்களிடையே தோன்றும் காதலும், உணர்ச்சிகளும் படம் பார்க்கும் நமக்கும் கடத்தப்பட்டு பரவசப்படுத்துகிறது. முதலில் ஆலிவரின் வெறும் தீண்டலே எலியோவுக்கு கிளுகிளுப்பு கொடுக்க, பின்னர் எலியோ ஆலிவரின் உள்ளாடைகளை முகர்ந்து பார்க்கும் அளவுக்கு ஈர்க்கப்படுகிறான். தனியாக ஓடையில் குளிக்கும் சந்தர்ப்பத்தில் எலியோ ஆலிவரின் சுன்னிமேட்டை அழுத்தி தன்னுடைய பாலீர்ப்பை வெளிப்படுத்துகிறான். இது மட்டும் தான் “sexually” காட்சி. 🙂 அதை தொடர்ந்து எலியோவும் ஆலிவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள். வயதில் மூத்தவன் என்பதாலும், எலியோ தன் பேராசிரியரின் மகன் என்பதாலும் ஆலிவர் அவனது physical advancements-ஐ நிராகரிக்கிறான். எலியோவுடன் பேசுவதையும் தவிர்க்கிறான்.
அதை தொடர்ந்து எலியோ rebound-ஆக தன் girlfriend மார்சியாவை ஓத்து, ஆலிவரை மறக்க முயற்சிக்கிறான். ஆனாலும் எலியோவால் ஆலிவரின் மீதான ஈர்ப்பை விடமுடியவில்லை. அதனால் தன்னிடம் பேசுமாறு ஆலிவருக்கு துண்டு சீட்டு கொடுக்கிறான். அதனால் மனம் இளகி மௌனம் கலைக்கும் ஆலிவர், எலியோவை தன்னை நள்ளிரவில் வந்து பார்க்குமாறு சொல்கிறான். அந்த சந்திப்பில் இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். உணர்ச்சி மிகுதியில் ஆலிவர் “நீ என்னை உன் பெயரால் கூப்பிடு (Call me by your name)” என்று அவன் தன்னுள் இருப்பதை சொல்கிறான். ஆனால் அடுத்த நாள் காலை தங்களுக்கு நடுவே எதுவும் நடக்காதது போன்ற ஆலிவரின் நடவடிக்கைகளால் எலியோ குழப்பமடைகிறான். முலாம்பழத்தில் சுன்னியை சொருகி சுய இன்பம் செய்தும் ஆலிவரின் மீதுள்ள மயக்கத்தை மடைமாற்ற முயற்சிக்கிறான்.
இந்த குழப்பத்தில் இருக்கும்போது ஆலிவரின் internship முடிவுக்கு வருகிறது. எலியோவின் பெற்றோருக்கு அவர்களுக்கு நடுவே உள்ள உறவு புரிந்ததால், இருவரும் பிரியும் முன்பு Bergamo நகரத்துக்கு சுற்றுலா போகுமாறு சொல்கிறார்கள். தங்கள் உறவின் கடைசி நாட்களை எலியோவும் ஆலிவரும் மிக சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். அங்கிருந்து ஆலிவர் தன் ஊருக்கு கிளம்பிவிட, மனமுடைந்த எலியோ தன் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து தன்னை அழைத்து செல்லுமாறு சொல்லி அழுகிறான். சாமுவேல் எலியோவிடம் அவனுக்கும் ஆலிவருக்கும் நடுவே உள்ள ஈர்ப்பு தனக்கு புரிந்ததாகவும், அவன் அதை புனிதமாக காப்பாற்றவேண்டும் என்றும் சொல்கிறார். எலியோ மற்றும் ஆலிவரிடம் இருந்ததை தன்னால் ஒருபோதும் பெற முடியாததால் எலியோவின் மீது பொறாமைப்படுவதாகவும் அவனிடம் கூறுகிறார். எலியோ மெல்ல மெல்ல தேறுகிறான்.
சில வருடங்கள் கழித்து ஒரு ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது ஆலிவரிடம் இருந்து அழைப்பு வருகிறது. தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக சொல்கிறான். எலியோ ஆலிவரை அவனது பெயரைச் சொல்லி அழைக்கிறான், ஆலிவர் அவனுடைய பெயரைக் கூறுகிறான். ஆலிவர் எலியோவையும், அந்த கோடைக்காலத்தையும், அவர்களிடையே ஏற்பட்ட அழகான உறவியும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பதாகவும் சொல்கிறான். ஆலிவர் அழைப்பை துண்டித்ததற்குப் பிறகு, எலியோ நெருப்பிடம் அருகே அமர்ந்து, கண்களில் கண்ணீர் தளும்ப, தீப்பிழம்புகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அத்துடன் படம் முடிகிறது.
நம்புங்கள்… நான் இந்த படத்தை பார்த்து சில மாதங்கள் ஆகியிருந்தாலும், இந்த கதைச்சுருக்கத்தை எழுதியபோது என் நெஞ்சில் பாரம் ஏறுவதை உணரமுடிந்தது. ஏன் இந்த படம் க்ளாஸிக்காக கொண்டாடப்படுகிறது என்று இந்த நொடியில் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. இரு ஆண்களிடையே ஏற்படும் உறவின் ஆரம்ப நாட்களின் freshness, அதன் virgin feeling-ஐ எந்த காலத்திலும் யாராலும் மறக்க முடியாது. இந்த படம் அந்த உணர்ச்சியை மிக அழகாக, விரசமில்லாமல் நாசூக்காக கையாண்ட விதம் இந்த படத்தை கொண்டாட வைத்திருக்கிறது.
இதன் இயக்குனர் Guadagnino தன் “Call Me by Your Name” படத்தை ஒரு family-oriented film என்று குறிப்பிட்டதில் முரண்பாடு எதுவும் இல்லை. ஏனென்றால் இதில் முதன்மை கதாபாத்திரங்கள் எலியோவும் ஆலிவரும் ஆண்கள் என்பதை மாற்றி ஒருவரை பெண்ணாக்கி இருந்தால் கூட இந்த படத்தின் கருவும், செய்தியும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்காது என்பதே உண்மை. ஏனென்றால் படம் “அந்த நொடியில் வாழ்வதை”யும், உறவு மலர்வதில் கழியும் நொடிகளையும் தான் focus செய்கிறது. மேலும் படமாக்கப்பட்ட இடங்களான ஃபிரான்சு கிராமப்பகுதியும், அவர்களது வாழ்க்கை முறைகளும், கோடையும் ஒளிப்பதிவாளரின் ரசனையான கண்களால் மிக அழகாக செல்லுலாயிட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி
Loading ...
நீங்கள் இந்த படத்தை Amazon Prime-ல் பார்த்தால் நான் சொல்லியது எதிலும் மிகைப்படுத்தல் இல்லை என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
<--- முற்றும் --->
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
Alternate Blogger URL: