ஹா! ஹா! நான் ரொம்ப நாட்களுக்கு கே-க்கள் எல்லாம் பெண்மையின் நளினம் கலந்து தான் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். என்னுடைய பேச்சில், நடவடிக்கைகளில், நடையில் பெண்மை சாயல் இருந்ததால் நிறைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறேன். ஆனால் பல வருடங்கள் கழித்து நிறைய இன்ஸ்டாகிராம் புரொஃபைல்களை பார்த்த போது தான் ஒரு விஷயம் புரிந்தது – நிறைய மாடல்கள் – குறிப்பாக பிரேஸில் மற்றும் கிரேக்க, ஐரோப்பிய மாடல்கள்… அவர்களது கட்டுடலுக்கும், காந்த கவர்ச்சிக்கும் ஒரே நேரத்தில் பல பெண்களை அவர்களால் எளிதில் படுக்கைக்கு அழைக்கமுடியும் என்ற அதீத கவர்ச்சியுடன் இருப்பவர்கள். ஆனால் அவர்களில் நிறையபேர் கே-க்கள். அதில் பலர் மற்றொரு ஆணோடு சட்டரீதியாக கல்யாணம் ஆனவர்கள். சிலர் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பவர்கள். எனக்கு ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது – இவ்வளவு ஆண்மையாக, கவர்ச்சியாக இருப்பவர்கள் எப்படி கே-யாக இருக்கிறார்கள் என்று. பின்னர் தான் புரிந்தது கே தன்மைக்கும், உடம்புக்கும் சம்பந்தம் இல்லை… ஆண்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. ஓரின ஈர்ப்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது. அதுமட்டும் அல்லாது நல்ல உடற்கட்டு என்பது கவர்ச்சியையும் தாண்டி ஆரோக்கியத்துக்கு அவசியம். அதனால் தான் எனது கதாபாத்திரங்கள் எல்லாம் உடற்பயிற்சி செய்து ஆண்மை நிரம்பிய ஆனால் அதே சமயம் மனதளவில் ஒரேபால் ஈர்ப்பை விரும்பி ஏற்பவர்களாக உருவாக்கியிருக்கிறேன். மீண்டும் நான் முன்பே சொன்னது போல – எனக்கும் நல்ல உடற்கட்டு வேண்டும் என்ற நிறைவேறாத ஆசை / fantasy-ன் வெளிப்பாடும் கூட..

Free Sitemap Generator