நகரத்து காதல், கிராமத்து / சிறு நகரத்து காதல் என்று நான் காதலை பிரித்துப்பார்ப்பதில்லை. ஒருவேளை நான் வளர்ந்த சூழல் என்னையும் அறியாமல் இயல்பாக என்னுடைய கதைகளில் பிரதிபலிக்கலாம். அதே சமயத்தில் பள்ளியிலும், கல்லூரியிலும் வரும் காதலை நான் குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும், என்னை பொருத்தவரை தன் காலில் சுயமாக நிற்கும் வரை ஏற்படும் காதல், காமம் எல்லாம் ஒருவருடைய கவனத்தை திசைதிருப்பும் distractions என்பது எனது தீர்மானமான எண்ணம். தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு தான் தங்களுடைய உறவின் தேவை பற்றிய ஒரு தெளிவான பார்வை இருக்கும். காதலுக்கு பொருளாதாரமும், சுயமரியாதையும் மிக முக்கியம். அதனால் எனது கே கதபாத்திரங்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரத்தை திறம்பட அமைத்துக்கொண்டு, எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் தீர்க்கமாக / தீவிரமாக காதல் செய்யக்கூடிய பொருளாதார மேன்மை நிலையில் இருப்பவர்களாக இருப்பது எனது தெளிவான / conscious-ஆன முடிவு. என்னால் பள்ளி மாணவர்களிடையே செக்ஸ், ஆசிரியர் மாணவர் இடையே செக்ஸ் ஆகியவற்றை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதனால் அப்படிபட்ட கதாபாத்திரங்கள் வருவதற்கான பேச்சே இல்லை.
...