உங்களது பிளானெட் ரோமியோ, கிரைண்டர் செயலிகளின் முகவரி பகிரமுடியுமா?

நன்றி! நான் இந்த செயலிகளில் எப்போதுமே தீவிரமாக இருந்ததில்லை. நான் அவற்றில் இணைந்தபோது என் போன்ற ஒரே பாலுணர்ச்சி / கண்ணோட்டம் கொண்ட நண்பர்கள் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. ஆனால் 99% உரையாடல்கள் – ASL?, Top/Bottom?, Have Place?, Will you suck? என்று மட்டுமே ஆரம்பிக்கின்றன. ஒரு சிலர் பேசி பேசி என்னை கவர்ந்து மேட்டர் முடிந்ததும் காணாமல் போய் / கண்டுகொள்ளாமல் கழற்றிவிட்டுவிட்டார்கள். அதனால் நொந்துப்போய் இந்த செயலிகளில் இப்போது முற்றிலுமாக இல்லை. அது மட்டும் இல்லாமல் எனக்கு காதல் செய்ய (உடலுறவு கொள்ள) தற்போது இருக்கும் மிகச்சில மனதுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதும் மற்றொரு காரணம். எப்போதாவது நாங்கள் சந்திக்கும்போது இயல்பாக முத்தங்கள் பரிமாறிக்கொள்வதும், கைகள் கோர்த்துக்கொண்டு பேசிக்கொண்டே கடலலையில் கால் நனைய நடப்பதும் மிக சந்தோஷமாக இருக்கிறது. இதுவே போதும். சிலசமயம் இவற்றையும் தாண்டி “அது” நடந்தால் அதை போனஸாக நினைத்து சந்தோஷம் அடைந்து நிறைவாக இருக்கிறேன். மற்றபடி “அது” எனது தேடல் இல்லை.

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.