என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. நான் 30களில் உள்ள ஒரு ஈரினச்சேர்க்கையாள மென்பொறியாளன். பெண்ணோடு வெற்றிகரமான உடலுறவு கொள்வதால் என்னை ஈரனச்சேர்க்கை என்று அழைத்துக்கொண்டாலும், நான் என்னை ஒரு ஒளிவு ஓரினச்சேர்க்கையாளன் (Closeted Gay) என்று தான் வகைப்படுத்துகிறேன். இந்தியாவில் மட்டுமல்ல பல முன்னேறிய நாடுகளிலும் கூட கே-க்கள் உடம்பில் இளமையும், கவர்ச்சியும் இருக்கும்வரை மட்டுமே கலர்ஃபுல்லான வாழ்க்கை வாழ்கிறார்கள். அழகு குறைய, தோல் சுருங்க ஆரம்பிக்க பெரும்பாலானவர்களின் வாழ்க்கை தனிமையானதும், துயரம் நிறைந்ததுமாகவே இருக்கிறது. அதனால் நான் எனது ஓரினச்சேர்க்கை விருப்பத்தை புறந்தள்ளிவிட்டு “சராசரி” மனிதனாக வாழ முயற்சித்து வருகிறேன். பொதுவெளியில் இவ்வளவு தகவல்கள் மட்டும் போதும் என்பது எனது கருத்து.
...